விருதுநகர் மாவட்டம் இராஜபளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம் இன்று தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செட்டியார்பட்டி பகுதியில் மழைநீர் தேங்கி கொசு அதிகமாக உள்ளது இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

செட்டியார்பட்டி பகுதியில் உள்ள வார்டுகளில் கடந்த மூன்று மாதங்களாக கழிவுநீர் ஒடை தூர்வராமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கொசு மருந்து அடிக்காமலே கொசு மருந்து அடித்ததாக முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பில் போட்டு பணம் எடுத்துள்ளதாகவும் அதே போல் பல்வேறு திட்டங்கள் வேலை செய்ததாக கூறி ரசித்து போடாமல் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கவுன்சிலர் அறிவுமணி குற்றச்சாட்டை முன்வைத்து தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் இந்த கூட்டத்தை நடத்த வேண்டிய செட்டியார்பட்டி செயல் அலுவலர் கணேஷன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை இங்கு கூட்டம் போட்டுவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் எங்க சென்றார். செயல் அலுவலர் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்து கவுன்சிலர்கள் வாக்குவாதம் ஈடுபட்டு வேலை செய்த பில் போட்ட ரசிதுகளை காமிக்க வேண்டும் இல்லை என்றால் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியே செல்லவும் என கூறி வாக்குவததில் ஈடுபட்டனர் ஒரு கட்டத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் முடிந்தது என கூறி வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
இதனால் செயல் அலுவலர் கணேசன் மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன் கொண்டுவந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் கூட்டம் நிறைவுற்றன.








