திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த உயிருக்கு போராடிய வாலிபரை மீட்ட தீயணைப்புதுறையினர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த S.பாறைப்பட்டி அருகே உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சத்தியமூர்த்தி(33) என்பவர் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி மீட்பு வலை மூலம் சத்தியமூர்த்தியை உயிருடன் மீட்டனர்.
இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








