மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சுமார் 5,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு கிராமத்தின் தலைவராக முள்ளி ப்பள்ளம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் கேபிள் ராஜா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்றது குறிப்பாக இளங்காளியம்மன் கோவில் சங்கையா கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் மற்றும் நாடக மேடை பகுதி வெங்கடேச பெருமாள் கோவில் பகுதி வ உ சி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்றது.

கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத் தலைவர் கேபிள் ராஜா இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த செயலுக்காக பலதரப்பட்ட பொதுமக்கள் தங்கள் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.








