மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் குழந்தைகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சோழவந்தானில் உள்ள முக்கியமான வீதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது குறுக்கே செல்வதும் இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படுவதும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. மேலும் அருகில் உள்ள தென்கரை முள்ளி ப்பள்ளம் கிராமங்களில் இரவு நேரங்களில் தெருக்களில் தெரு நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் குழந்தைகள் என அனைவரையும் குறைத்து துரத்துவதால் ஒருவித அச்சத்துடன் தெருக்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆகையால் இந்தப் பகுதியில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.








