• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

ByT. Balasubramaniyam

Nov 27, 2025

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர்-கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், திமுக இளைஞரணி செயலாளர்,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தாபழூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.க.கண்ணன் வழிகாட்டுதலின்படி, தா.பழூரில் அமைந்துள்ள,தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, மொழிப்போர் தியாகி,மக்கள் தொண்டர், முன்னாள் எம் எல் ஏ க.சொ.கணேசன் முழு திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ,தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டது .

இந்நிகழ்வில் தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ்,ஒன்றிய துணை செயலாளர் அ.இராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன்,மாவட்ட அணி நிர்வாகிகள் இரா.சங்கர், கே.எஸ்.ஆர்.கார்த்திகேயன், ந.கார்த்திகைகுமரன்,த.குணசீலன், க.நளராசன்,முனைவர் மு.முருகானந்தம்,அ.தங்கபிரகாசம், எழிலரசி அர்ச்சுனன், நீல.மகாலிங்கம்,தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், திமுக கிளை செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகி பலர் கலந்துகொண்டனர்.