திருப்பரங்குன்றம் ரயில் நிலைய தண்டவாளத்தில் கடந்த 24 ஆம் தேதி நடந்து சென்ற மல்லிகா என்ற பெண்ணிடம் கண்ணில் மிளகாய் பொடியை தூவி நான்கு பவன் செயினை வழிப்பறி செய்து மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து மதுரை இரும்பு பாதை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி விட்டுச் சென்ற தடயம் மற்றும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பது தெரிய வந்தது எனவே நான்கு பவுன் தங்கச் செயினை மீட்டு கைது செய்தனர்.








