பழநியில் லங்கா கட்டை உருட்டி பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.60ஆயிரம் பணம், கார், டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல், பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை முதல் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது இந்நிலையில் கிழக்கு கிரிவீதி இலவச சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ‘லங்கா கட்டை’ உருட்டி பக்தர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைத்து ஏமாற்றும் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்ட போது

அவர்கள் கோவை, சூளூரை சேர்ந்த ரத்தினம்(59), ரமேஷ்குமார்(32), செல்வபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன்(48), திருப்பூரை சேர்ந்த மூக்கையா(67), கழிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி(47) என்பது தெரியவந்ததை தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.60 ஆயிரம் பணம், கார், டூவீலர்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








