மதுரை வாடிப்பட்டி அருகே தனிச்சியம் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லை குடோனுக்கு கொண்டு சென்று திரும்ப வந்து கொள்முதல் நிலையத்தில் இறக்கி லாரிகளில் மாற்றி நடைபெற்ற மிகப்பெரிய ஊழலை தட்டி கேட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்,

தாக்குதலில் படுகாயம் அடைந்த சோணமுத்து படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது திமுகவைச் சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகி நெல் மூடை ஒன்றுக்கு அறுபது ரூபாய் கமிஷன் வாங்கிக்கொண்டு கொள்முதல் செய்து வந்தார் திமுகவின் இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து கொண்டு அராஜகம் செய்து வந்தார். இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு குடோன்களுக்கு அனுப்பப்பட்ட நெல் மூட்டைகளை மீண்டும் ரைஸ் மில்லுக்கு கொண்டு செல்வதாக கூறி திரும்ப அதே கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து இறக்கி லாரியை மாற்றி மீண்டும் குடோன்களுக்கு ஏற்றி செல்லும் நடைமுறை மூலம் மிகப்பெரிய ஊழல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம் நெல் கிலோவிற்கு சுமார் பத்து ரூபாய் லாபம் என்ற நிலையில் கொள்ளையடித்து வந்தனர். போக்குவரத்திற்கு வசதியாக மற்றும் மக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத நெல் கொள்முதல் நிலையங்களில் நள்ளிரவு ஒரு மணி இரண்டு மணி அளவில் இந்த வேலை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் தனுச்சியம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளுடன் வந்த லாரியை அங்கிருந்த காங்கிரஸ் வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் தலைவர் சோனை முத்து என்பவர்
இது குறித்து அரசுக்கு ஏன் இழப்பை ஏற்படுத்துகிறீர்கள் என்று தட்டி கேட்டபோது திமுக இளைஞர் அணி நிர்வாகி தனது அடியாட்கள் ஏழு பேர் கொண்ட கும்பலை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது
படுகாயம் அடைந்த சோனமுத்துவை அருகில் இருந்தவர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரது கையில் காயமும், மண்டையில் வீக்கமும் காதுகளில் ரத்தம் வடியும் சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்து குடோன்களுக்கு அனுப்பி அதை திரும்ப கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பி லாரியை மாற்றி கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய இமாலய ஊழல் நடைபெற்று வந்தது இதன் மூலம் அம்பலம் ஆகியுள்ளது
இது குறித்து நெல் கொள்முதல் நிலையங்களில் விசாரணை செய்து நடவடிக்கை நடத்த வேண்டும் தட்டி கேட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவரை தாக்கிய திமுக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று சோன முத்துவின் குடும்பத்தினர் தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளனர்








