மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் என்ற சிறப்பு படை ( பட்டாலியன்) காவலர் 2023 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார்.
சிறப்பு காவல்படை காவலரான மகாலிங்கம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்பாக நேற்றிரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு 3 மணியளவில் திடிரென பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் தனக்குதானே சுட்டுகொண்டு தற்கொலை செய்துள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மகாலிங்கத்தை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
பின்னர் அவரை பரிசோதித்த வரும்வழியிலயே காவலர் மகாலிங்கம் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து காவலர் மகாலிங்கத்தின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
காவலர் தற்கொலை சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காவலர் மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு பின்னர் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.








