அதிநவீன லேஜியன் போகோ மெஷின் மூலம் அறுவை செய்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் Dr.கமல் பாபு தலைமை கண் மருத்துவர்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் வாசன் கண் மருத்துவமனை உள்ளது 15 ஆண்டு துவக்க விழாவும் புதிய அதிநவீன கண் அறுவை சிகிச்சை எந்திரம் மற்றும் அறுவை சிகிட்சை அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் மதுரை மாநகர துணை மேயர் நாகராஜன். திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, மாமன்ற உறுப்பினர் விஜயா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .
வாசன் கண் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர் கமல் பாபு மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அனுஷ்கா, டாக்டர் ப்ரீத்தி, Dr பிரபாகர சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் .

விழாவில் பேசிய மாநகர துணை மேயர் நாகராஜன் கூறும் போது இப்போது சர்க்கரை நோயினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உணவுப் பழக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும்பாலும் கண் நோயாக தான் மாறுகின்றன அவற்றை தடுக்கவும், கண்களை பாதுகாக்கவும் தற்போது அதிநவீன அறுவை சிகிச்சை மருத்துவ வசதிகள் கொண்டு வந்ததன் மூலம் கண் நோய்களின் குறைகளை நவீன லேசர் மருத்துவம் மூலம் நோயாளி களுக்கு தீர்க்க முடியும் என எனகூறினார்.
பின்னர் வாசன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கமல் பாபு செய்தி அவர்களிடம் கூறுகையில் திருநகர் கண் மருத்துவமனை மையம் தற்போது அனைத்து வகையான கண்ண அறுவை சிகிச்சைகளையும் செய்யக்கூடிய வசதியுடன் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது மேலும் அனுபவிக்க மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் இந்த மையம் உயர்தர அறுவை சிகிச்சை செய்யும் மையமாக செயல்படுகிறது தற்போது சர்க்கரை நோய் மற்றும் இதர பாதிப்புகளினால் கண் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்க அதிநவீன மருத்துவ இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் நோயாளிகள் தங்கள் கண் சம்பந்தப்பட்ட நோய்களை பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்து ஒரு மணி நேரத்திலே வீட்டிற்கு செல்லும் வகையில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் பயன்பாட்டிற்கு எளிதாகவும் பயனுள்ளதாகவும் அமையும் முன்பு கண் அறுவை சிகிச்சை செய்யும் போது இரண்டு நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கும் நிலையில் இருந்தது தற்போது அதிநவீன லெஜியன் போகோ மெஷின் மூலம் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நவீன தொழில்நுட்பத்துடன் உடனடியாக ஆய்வு செய்து அறுவை சிகிச்சை அரை மணி நேரத்திற்குள் முடிந்துவிடும்.
கண் நோய் அறுவை சிகிச்சை செய்த பின் ஒரு மணி நேரம் ஓய்வுக்கு பின் நோயாளிகள் வீட்டுக்கு செல்லலாம். இதனால் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீணாக நாள் கணக்கில் மருத்துவமனை செல்ல அவசியம் இல்லாமல் எளிதாக மற்றும் பயனுள்ள வகையில் இந்த அறுவை சிகிச்சை இயந்திரம் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுவதால் கண் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பு என்றாலும் உடனடியாக சரி செய்து கொள்ளலாம் என Dr.கமல் பாபு கூறினார்.








