திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அனுமதி பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்த 5 கடைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரகட்டுப்பாடு) சக்திவேல் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி, தொப்பம்பட்டி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூச்சி மருந்து உரிமம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான அனுமதி சான்று, இருப்பு பதிவேடு, விலைப்பட்டியல், ரசீது புத்தகம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து பூச்சி மருந்து வாங்கி விற்பனை செய்த 5 கடைகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.








