திண்டுக்கல்லில் தக்காளி விலை கிலோ ரூ.75 க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி பயிர்கள் பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் செடியில் இருந்து கீழே விழுந்து தக்காளி அடிபட்டு வருகிறது. இதனால் திண்டுக்கல் மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
திண்டுக்கல்லில் சில்லரை விற்பனையில் தக்காளி 1 கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தக்காளி வியாபாரி சாந்தி கூறுகையில், வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்றார்.








