திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக நீதியரசர் ஜிஆர் சாமிநாதன் மலை மீது சென்று ஆய்வு செய்வதாக தெரிவித்த நிலையில் நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்காக நேற்று மாலை மலை மீது ஆய்வு செய்தார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துண் இருக்கும் பகுதி உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் வழக்கமாக இந்து அறநிலைத்துறை ஏற்றும் பகுதிகளில் ஒன்றரை மணி நேரமாக ஆய்வு செய்தார். உடன் மதுரை மாநகர் துணை ஆணையர் இனிகோ திவ்யன் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் ஆய்வின் போது திடீரென ட்ரோன் கேமரா ஒன்று பிறந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டது மதுரை பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த யூடியூப்பார் மணி என்பவரின் ட்ரோன் கேமரா என்பது தெரியவந்தது.
தொடர்பாக அவரை அழைத்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில் யூடியூப் காக எதர்ச்சியாக எடுத்தது தெரிய வந்தது.. எனவே அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






; ?>)
; ?>)
; ?>)
