விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் வலையபட்டி கிராமத்தில் தெருக்களில் சாலை வசதி செய்து தரவும், சேதமடைந்த மேல்நிலை தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும், எனவும் ஒன்றாவது பாலத்திலில் இருந்து இந்து துவக்க பள்ளி வரையிலான சாலை தொடர் மழையின் காரணமாக சகதி காடாக இருக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், தவறி விழுந்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும், புகார் செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிவகாசியிலிருந்து ஆலங்குளம் வழியாக அப்பையநாயக்கன்பட்டி செல்லும் அரசு பஸ்ஸை திடீரென சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலையபட்டியில் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் போலீசார் பஸ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.







; ?>)
; ?>)
; ?>)
