தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் இருந்து திருவோணத்தை தனி தாலுகாவ பிரிக்கப்படும் என கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரத்தநாட்டில் இருந்து திருவோணத்தை தனி தாலுகா ஆக பிரித்து முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார் .அதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளாக திருவோணம் தனி தாலுகா ஆக செயல்பட்டு வந்த நிலையில் நேற்று சுமார் 5 கோடி மதிப்பீட்டில் புதிய தாலுகா கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் எம் பி முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், ஒரத்தநாடு. முன்னாள் எம் எல் ஏ ராமச்சந்திரன், திருவோணம் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, ஆகியோர் அடிக்கல் நாட்டி குத்துவிளக்கேற்றி கட்டிட பணியை தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி , தஞ்சாவூர் முன்னாள் மாவட்ட சேர்மன் உஷா புண்ணியமூர்த்தி, திருவோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணப்பன், முன்னாள் யூனியன் சேர்மன் செல்லம் சௌந்தரராஜன் மற்றும் திருவோணம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)
