• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..,

BySeenu

Nov 18, 2025

கோவையில் 10 அம்ச கோரிக்களை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாளம் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நீக்க வேண்டும், காலியாக உள்ள பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அரசு ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம் தற்போதைய முதல்வர் எதிர் கட்சியாக இருந்த போது ஜாக்டோ – ஜியோ அமைப்பிடம் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் நான்கரை ஆண்டு காலமாகியும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே தமிழக முதல்வர் உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.