பீகார் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர் 14ஆம் தேதி காலை தொடங்கியது.
ஆரம்பகட்ட சுற்றுகளில் இருந்து அங்கே ஆளுங்கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் -பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னணி வகித்து வந்தது.
சுற்றுகள் அதிகரிக்க அதிகரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி விகிதம் தொடர்ந்து அதிகரித்தது.
மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகளை பெற்றுள்ள பீகாரில் இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி 199 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதில் பாரதிய ஜனதா கட்சி 90 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 80 இடங்களிலும் லோக் ஜனசக்தி கட்சி 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தேஜஸ் வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 29 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
இதனால் பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை அமைகிறது.
நிதீஷ் குமார்- மோடி ஆகியோரின் கூட்டணி பெரும் வெற்றி பெற்றதால், ஆங்கில ஊடகங்கள் நிமோ அலை பிகாரில் வீசி இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.






; ?>)
; ?>)
; ?>)
