விருதுநகர் மாவட்டம்,விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நகர,மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் (BLA 2) பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் K T ராஜேந்திர பாலாஜி பேசியதாவது பயிற்சி முகாமிற்கு வந்துள்ள BLA 2 ஆகிய நீங்கள் BLO உடன் சென்று இறந்தவர்கள் வாக்குகளை நீக்கி கள்ள ஓட்டு போட விடாமல் தடுக்க வேண்டும்.

ஏனென்றால் திமுகவினர் கள்ள ஓட்டுகளை போட முயற்சி செய்வார்கள் கடந்த தேர்தலில் நாம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளோம்,அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்து உள்ளது பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர் நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? எடப்பாடியார் முதல்வராக இருந்த போது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார்,நீங்கள் டெல்லியில் நண்பன்,தமிழ்நாட்டில் எதிரி என்று நாடகம் ஆடுகிறீர்கள் ஆகவே முகவர்கள் ஆகிய நீங்கள் விழிப்புடன் செயல்பட்டு அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்கவேண்டும் என்று கூறினார். இம்முகாமில் முன்னால் MLA வரதராஜன்,வக்கீல் விஜயகுமார், கண்ணன்,ஶ்ரீராம் பாலகிருஷ்ணன்மச்சராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
