மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் சோழவந்தானின் முக்கிய பகுதியாக உள்ள பேருந்து நிலையப் பகுதியில் அரசு மருத்துவமனை சார் பதிவாளர் அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அரசு கால்நடை மருத்துவமனை ரயில் நிலையம் தினசரி சந்தை திரையரங்கம் கிறிஸ்துவர்களில் திருச்சபை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய அலுவலகங்கள் உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு பாதை வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவமனை மற்றும் தினசரி சந்தைக்கு வரும் பொதுமக்கள் பேருந்துக்காக பேருந்து நிலையம் செல்லும் போது பேருந்து செல்லக்கூடிய வழியிலேயே செல்ல வேண்டி இருப்பதால் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறக்கும் பட்சத்தில் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் அதிகம் கூடும் நிலையில் அந்த வழியாக செல்லும் பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதனால் புதிய சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பி கே மூக்கையா தேவர் ஆகியோர்களின் திருவுருவச் சிலைகள் மற்றும் மாமன்னர் மருது பாண்டியர் படங்கள் உள்ள இடத்தின் அருகே கடந்த காலத்தில் இருந்தது போல் பாதை அமைத்து பொதுமக்கள் பேருந்து நிலையம் செல்ல வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சில தினங்களில் சார் பதிவாளர் அலுவலகம் திறக்கும் பட்சத்தில் போக்குவரத்து வாகனங்களால் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் அருகில் வழிபாட்டு தளங்களும் இருப்பதால் அதிகளவு பொதுமக்கள் கூடும் இடமாக இந்த பகுதி இருந்து வருகிறது ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் பாதை அமைத்து தர அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)