மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்ட சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சோழவந்தான் பேட்டை ஒன்னாவது வார்டு முதல் 18 வார்டுகளிலும் வர்த்த நிறுவனங்கள் மற்றும் கடைவீதி பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய் துறை இணைந்து அகற்றிச் சென்றனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய சில வாரங்களுக்கு பின்பு மீண்டும் ஆக்கிரமிப்பு களை ஒரு சிலர் செய்ய தொடங்கினர். இதனால் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பெரிய கடை வீதி சின்ன கடைவீதி மார்க்கெட் ரோடு வட்ட பிள்ளையார் கோவில் மருது மகால் பகுதி அரசு மருத்துவமனை பகுதி காமராஜர் சிலை பகுதி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ததால் பேருந்துகள் சோழவந்தான் நகருக்குள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் வருவாய்த்துறையினருடன் இணைந்து மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். அதற்கான முன்னேற்பாடாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி மருத மஹால் பகுதி வட்டப்பிள்ளையார் கோவில் பகுதி ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி பேரூராட்சி அலுவலகப் பகுதி அரசு மருத்துவமனை பகுதி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள பகுதிகளை அளவிடும் பணிகள் நடைபெற்றது.

இதில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இன்னும் ஒரு சில வாரங்களில் சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை மீண்டும் அகற்றும் பணி தொடங்கும் என்று அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ள நிலையில் வர்த்தகர்கள் தங்கள் பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்தால் தாங்களாக முன்வந்து எடுத்துக் கொள்ள வேண்டுமென வர்த்தகர்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகள் எவ்வளவு என்ற மார்க் செய்தும் வர்த்தகர்களுக்கு தெரிவித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.











; ?>)
; ?>)
; ?>)