ஒரத்தநாடு அருகே இரண்டு மாதத்திற்கு பிறகு ஆற்றில் மிகுந்தவரின் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பனி கொண்டான் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் அபிமன்யு 25, இவர் கடந்த ஒன்பதாம் மாதம் ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டு உடல் கூராய்வு செய்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அபிமன்யுவின் மனைவி பிரியங்கா வட்டாத்தி கோட்டை காவல் நிலையத்தில் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருந்தார் . புகார் அடிப்படையில் வாடாத்திக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அபிமன்யுவின் நண்பர்கள் ஆன அனந்தகோபாலபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் ராஜசேகர் வயது 34, என்பவரையும் வெட்டுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் ரஞ்சித் வயது 27, என்பவரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அபிமன்யு ராஜசேகர், ரஞ்சித் ஆகியோர் சம்பவத்தன்று மது அருந்தி கொண்டிருந்ததாகவும் அப்பொழுது ஆற்றின் பாலத்திலிருந்து தடுமாறி அபிமன்யு ஆற்றில் விழுந்ததாகவும் அதில் எங்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அங்கிருந்து பயந்து சென்று விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை அல்லாத கொலை கொலை எனவும் தவறி விழுந்தவரை மீட்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேலும் இது தொடர்பாக அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் உரிய தகவல் தெரிவிக்க தெரிவிக்காத இருவரையும் கைது செய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.











; ?>)
; ?>)
; ?>)