• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

புட்டபர்த்தி சாய்பாபாவின் 100 வது பிறந்தநாள் விழா..,

ByKalamegam Viswanathan

Nov 12, 2025

புட்டபர்த்தி சாய்பாபாவின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத யாத்திரை நடைபெற்றது. புட்டபர்த்தி சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மதுரை மாநகர் முழுவதும் ஒவ்வொரு பிரேம வாகினி என அழைக்கப்படும் ரத யாத்திரையானது நடைபெற்றது.

இதில் மதுரை மாநகர் முழுவதும் ஒவ்வொரு நாட்களும் இந்நிகழ்வானது நடைபெற்று வருகிறது இதில் ஒரு பகுதியாக மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் ரத யாத்திரை யானது நடைபெற்றது இதில் பஜனை பாடல்கள் பாடியும் பெண்கள் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு எஸ் எஸ் காலனி முழுவதும் ரதத்தை சுற்றி வந்து சாய்பாபாவை உருவப்படத்திற்கு தீபா ஆராத்தி காட்டி வழிபாடு நடத்தினர்.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வந்து நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு நூறு வகையான பிரசாதங்கள் அவரவர்கள் வீட்டில் இருந்து தயாரித்து சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து வந்திருந்த பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர்.