• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

T. கல்லுப்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல்..,

T. கல்லுப்பட்டி யில் விவசாயிகள் சாலை மறியல் இன்று 12-11-2025 காலை 10:30 மணி அளவில் தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA. நாராயணசாமி தலைமையில் பேரையூர் தாலுகாவில் விவசாயிகள் செலுத்திய 2024 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டில் பல்வேறு குளறுபடிகள் செய்து பயிர் காப்பீட்டை மோசடி செய்துள்ள வேளாண்மை துறை இன்சூரன்ஸ் நிறுவனத் துறை ஆகியோரை கண்டித்தும் மற்றும்

வேலாம்பூர் வையூர் ஆகிய கிராமங்களில் பட்டாசு ஆலை அமைக்கப்படுவதை தடை செய்யக்கோரியும்

ரெட்டரைப்பட்டி கிராமத்தில் ஊருக்கு மிக அருகில் கல்குவாரி அமைத்து அதிக அளவில் வெடிகள் போட்டு கிராமமே அதிர்வு அளவுக்கு கல்குவாரி நடைபெறுவதை தடை செய்ய வேண்டியும் பலமுறை மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இது சம்பந்தப்பட்ட 28 துறைக்கும் மனுக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொண்டனர் மறியல் போராட்டத்தின் முடிவில் காவல் துறையினர் விவசாயிகளை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர்

இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை பகல் 12 மணி அளவில் லட்சுமி திருமண மண்டபத்தில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான மதிப்புக்குரிய RBஉதயகுமார் அவர்கள் மண்டபத்தில் வந்து விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் மேலும் இந்தக் கோரிக்கைகளுக்கு நானும் உங்களுடன் இருந்து இந்த கோரிக்கையை அரசுக்கு எடுத்துக் கூறி அதற்குண்டான தீர்வு காணும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக நான் செயல்படுவேன் என்று மாநில தலைவர் ஓ ஏ நாராயணசாமி அவர்களிடமும் விவசாய பிரதிநிதிகள் இடமும் ஆதரவு தெரிவித்தார்

இந்தப் பிரச்சனைக்கு சரியான முடிவை மதுரை மாவட்ட ஆட்சியர் எடுக்கவில்லை எனில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னையில் முதலமைச்சர் வீட்டின் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவில் தீர்மானிக்கப்பட்டது

இந்தப் போராட்டத்தில் மதுரை மாவட்ட தலைவர் சீனிவாசகன் தென்காசி மாவட்ட செயலாளர் செல்லப்பா ரெட்டரப்பட்டி மாரிமுத்து ஜெயச்சந்திரன் மற்றும் மோதகம் கிராம விவசாயிகள் சுப்புலாபுரம் கோப்பையை நாயக்கம்பட்டி முத்துலிங்கபுரம் பழனி குமார் உச்சம்பட்டி நல்லையா ஆகிய கிராமங்களில் இருந்து திரளான விவசாயிகள் கோபிநாயக்கன்பட்டி வையூர் தர்மராஜ் மற்றும் திரளான பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்