சிவகாசியில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

. ரத்ததானம்வேண்டும் செய்வோருக்கு 5 கிலோ அரசி பை, காய்கறி, பள்ளி பேக், ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் காலை முதல் இளைஞர்கள், இளம்பெண்கள், என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்த தானம் வழங்கினர். மேலும் ரத்ததானம் வழங்க வந்த அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பின்னர் ரத்ததானம் வழங்க அனுமதிக்கப்பட்டனர்.

. இதனைத் தொடர்ந்து ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் அரிசி, காய்கறி, பள்ளி பேக் உள்ளிட்ட பரிசு தொகுப்புகள் அடங்கிய பொருட்களை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் மற்றும் மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் வழங்கி அனைவரையும் பாராட்டினர்.
இதனிடையே இரத்ததான முகாமில் தரப்பட்ட சுமார் 600 யூனிட் ரத்தம் சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது.











; ?>)
; ?>)
; ?>)