விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக திருவேங்கடத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது பஸ்ஸில் 57 பயணிகள் அமர்ந்திருந்தனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர் நாயக்கன்பட்டி கிராமத்தின் அருகே வந்தபோது பஸ்ஸின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து ஏதும் ஏற்படாமல் பஸ் ரோட்டின் ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. பயணிகள் மாற்று பஸ்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர்.












; ?>)
; ?>)
; ?>)