விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். சிவகாசி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.61 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள். கடந்த ஆண்டு ஆக.3ம் தேதி தொடங்கியது.

இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் மீன்மார்க் கெட் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத் தில் ரயில்வே மேம்பா லம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. 17 கான்கி ரீட் தூண்களுடன் பாலம் அமைக்கும் பணிகள் நடை பெற்றது. இப்பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொறு பணிகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு, அசோகன் எம்எல்ஏ தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனால் நிர்ணயிக்கப் பட்ட திட்ட காலத்திற்கு முன்பே பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் வண்ணம் தீட்டும் பணிகளும் நிறைவ டைந்தது. தற்காலிகமாக மின் விளக் குகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை தவிர்கும் வகையில் ரயில்வே மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
புதிய ரயில்வே மேம் பாலத்தை பல்வேறு துறை அதிகாரிகள், அசோகன் எம்எல்ஏ, ஆய்வு செய்தனர். திமுக நகர செயலாளர் உதயசூரியன் மற்றும் திமுக ,காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
புதிய பாலத்தை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்
புதிய ரயில்வே மேம் பாலம் திறந்து வைக்கப்ப டுவதன் மூலம் சிவகாசி சுற்றுவட்டார மக்களின் 30 ஆண்டுகால கனவை தமிழக முதல்வர் நிறைவேற்றி கொடுத்துள்ளதாக சிவகாசி மக்கள் முதல்வருக்கு நன்றிதெரிவித்து வருகின்றனர்.











; ?>)
; ?>)
; ?>)