விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் சங்கர் (42), இவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு அருகே உள்ள வீட்டின் பின்பகுதியில் பாம்பு சென்றுள்ளது. பாம்பை விரட்ட பழைய துனிகளை வைத்து தீ வைத்து எரித்துள்ளனர். அப்போது தீ அருகில் இருக்கும் பழைய இரும்பு கடைக்கு பரவியுள்ளது.

இதில் பழைய இரும்பு கடையில் உள்ளே சேமித்து வைத்திருந்த பிளாஸ்டிக் மற்றும் வயர்கள் முழுவதும் எரிந்து நாசமாகியது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. தகவலறிந்து சாத்தூர் நகர் போலீசார் சம்ப இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.l











; ?>)
; ?>)
; ?>)