ஆலந்தூர் மான்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கராத்தே, யோகா, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவில் முதல் முறையாக ஆஸ்கார் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு ஆர்ட் கல்ச்சர் கவுன்சில் – டி.என்.ஏ.சி.சி சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
30 மாவட்டங்களில் இருந்து 3,500 மாணவர்கள் பங்கேற்று உலக சாதனை முயற்சியில் இணைந்தனர்.
சிறப்பு விருந்தினராக லயன் டாக்டர் எல்.டி.ஆர் இளைய கட்டபொம்மன், வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சத்தை சேர்ந்தவர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை டபுல்யு.எஸ்.எஸ்.ஏ தலைவர் டாக்டர் எஸ். சுதாகரன், இந்திய யோகாசன விளையாட்டு சங்கத்தின் தேசிய செயலாளர் டாக்டர் லட்சுமணன் நாராயணன், மற்றும் டி.என்.ஏ.சி.சி ஒருங்கிணைப்பு செயலாளர் கராத்தே மாஸ்டர் எம். முருகன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி உலக சாதனையாக சிறப்பாக அமைந்தது.











; ?>)
; ?>)
; ?>)