மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் அறுவடை முடிந்து கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையில் நெல் கொள்முதலை திடீரென அதிகாரிகள் நிறுத்தியதால் சுமார் 4000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது.

இருப்பாடி ஊராட்சியில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் தனியார் பள்ளி எதிரில் அரசு இடத்தில் கடந்த காலங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இடம் இல்லாததை காரணம் காட்டி சிலர் தனியார் இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மறைமுக ஆதரவு கொடுத்துள்ளதாகவும் இதனை பயன்படுத்தி அதிகாரிகளின் துணையுடன் சிலர் தங்களது இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தங்களுக்கு வேண்டியவர்களின் நெல்லை கொள்முதல் செய்ததாகவும் வெளியிலிருந்து வியாபாரிகளின் நெல்லை கொண்டு வந்து அரசு குடோன்களுக்கு அனுப்புவதாகவும் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்யாததால் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 4,000 மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்துள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இரும்பாடி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்து நாட்களாக கொள்முதல் செய்யாததால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் கூறும் நிலையில் இன்னும் அறுவடை செய்யாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்யாமல் வயல்களில் நெல்கள் தேங்கி கிடப்பதாக கூறுகின்றனர்.
நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டதாக அதிகாரிகள் கூறுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் உள்ளனர் விவசாயிகள்

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)