தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டங்காடு மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதியில் தலா ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

ஒட்டங்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, புதிய பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த மின்வாரிய பிரிவு அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் முயற்சியில், சொந்த கட்டடம் கட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சித்ரா, பட்டுக்கோட்டை செயற்பொறியாளர் மனோகரன், பேராவூரணி உதவி செயற்பொறியாளர் பிரகாஷ், ஒட்டங்காடு உதவி மின் பொறியாளர் திருச்செல்வம், ஆக்க முகவர் செந்தில், ஒட்டங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசாக்கண்ணு, பேராவூரணி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, ஆரோ.அருள், இள.அரசு, ரெனி நிஷாந்த், மரிய மைக்கேல், விஜயகுமார், கோவிந்தராஜ், கதிரேசன், சுவாமி மற்றும் கிராம மக்கள், மின்வாரிய ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.











; ?>)
; ?>)
; ?>)