கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 117 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு நிலை அலுவலரும், அவருடன் இரண்டு தன்னார்வலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 9,351 பேர் சிறப்பு தீவிர கணக்கெடுப்பு பணிகளிலும் 650 பேர் சட்டசபை தொகுதி வாரியாக அலுவல் பணிகளிலும் 10,000 பேர் தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் சென்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளாக பார்வையிட்டு ஆய்வு நடத்தி அறிவுரைகளை வழங்கி வருகிறார்.














; ?>)
; ?>)
; ?>)