விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே யாகசாலை தொடங்கி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் சிதம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விசேஷ தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மற்றும் இராஜபாளையம் காந்தி சிலை அருகில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயில், சொக்கர் கோயில், பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோயில், கொம்புச்சாமி திருக்கோயில், கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் கோயில்கள், குருசாமி கோயில், மாயூரநாதசாமி திருக்கோயில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.













; ?>)
; ?>)
; ?>)