விருதுநகர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மகப்ப்பேறு மருத்துவமனை பின்புறம் உள்ள வாருகால் சுற்றி இருபுறம் தடுப்பு சுவர் உள்ளது .(மேற்கு,மற்றும் தெற்கு பகுதிகள்) பிரதான சாலை உள்ள கிழக்கு பகுதியில் தடுப்பு சுவர் வேண்டி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து 14 வது வார்டு கவுன்சிலர் R. ராஜ்குமார் கூறியது ” மகப்பேறு மருத்துவமனை பின்புறம் உள்ள கட்டண கழிப்பறை சுற்றி உள்ள வாய்கால் புதர் மண்டி இருந்த பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் நாங்கள் சுத்தம் செய்து கொண்டோம் ஆனால் கிழக்கு பகுதியில் தடுப்பு சுவர் வேண்டும் ஏனெனில் அந்த இடம் அருப்பு கோட்டை பிரதான சாலை செல்வதால் தடுப்பு சுவர் அவசியம் தேவைப்படுகிறது,

இந்த வாருகாலில் கடந்த மாதம் மூன்று மாடுகள் தவறி உள்ளே விழுந்து விட்டன,நான் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து கால்நடைகளை மீட்டோம் ஆகவே விரைவில் இங்கு தடுப்பு சுவர் அமைத்து தருமாறுபொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)