• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

த.வெ.க ஜீப்பை தடுத்து பறிமுதல் செய்த காவல்துறையினர்..,

ByS. SRIDHAR

Nov 2, 2025

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புதுக்கோட்டை மாநகரில் சாலை ஓரங்களில் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டாலும் தங்களது பழக்கடை பூக்கடை ஆகியவை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் கொடி கலரில் பெரிய வணிகக் குடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

இன்று மட்டும் 20 வியாபாரிகளுக்கு குடை வழங்கப்பட்டது இதற்காக தமிழக வெற்றி கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அக்கட்சியில் நிர்வாக குழு உறுப்பினருமான பர்வேஸ் தனது கழக நிர்வாகிகளுடன் சைக்கிளில் வந்து வணிகர்களுக்கு குடை அளித்தார். அவரை பின் தொடர்ந்து ஜீப் மற்றும் கார்களும் வந்தன.

இந்த நிலையில் பிருந்தாவன அருகே அவர்கள் வணிகருக்கு குடை அளித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதி இன்றி ரோடு சோ போன்று சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்தது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் மாவட்ட செயலாளர் பர்வேஸ் தனது காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

இதற்கிடையில் நான்கு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தனர்.

இதனால் காவல்துறைக்கும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு வழக்கு பதிவு செய்வதாக கூறி ஜீப்பை விடுவித்து காவல்துறை சென்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.