விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் வடிவேல் 1945 ஆம் ஆண்டு வடிவேல் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை தொடங்கினார்.

தொடர்ந்து சிவகாசி, வெம்பக்கோட்டை, சுற்றுவட்டார பகுதியில் 13 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் தொடங்கினார்.

மேலும் வடிவேல் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஆப்செட், ஷோரூம், மற்றும் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
நிறுவனர் வடிவேல் அவர்களின் எண்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு கௌரவிக்கும் விதமாக பாறைப் பட்டியில் உள்ள வடிவேல் பயர் ஒர்க்ஸ் தலைமை அலுவலக வளாகத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருந்தது.
அதனை வடிவேல் பட்டாசு ஆலை நிறுவனங்களின் தலைவர் ஆறுமுகசாமி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வசந்த் விகாஸ், அதிபன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
பட்டாசு ஆலைகளின் தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




