விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை நதிக்குடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழக வருவாய்த்துறை மற்றும் ஆதார் பட்டா சிட்டா உள்ளிட்ட 43 பிரிவில் உள்ள தமிழக அரசு நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் பணி மேற்கொண்டு வந்தனர். முகாமில் பார்வையிட வந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் ஆய்வு செய்து அரசு துறை அலுவலர்கள் முறையாக பணி செய்வதில்லை என்றும் அதனால் தான் முதல்வர் இதுபோன்று சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி பணி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.
இதிலும் சரிவர வேலை செய்வதில்லை என்று வாக்குவாதம் செய்ததால் முகாமில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் என பலரும் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனை கண்டித்து முகாமினை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் அரசு துறை அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வந்த பயனாளிகள் அலுவலர்கள் இன்றி புலம்பியவாறு திரும்பிச் சென்றனர்.




