மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள திருமுருகன் திருக்கோவிலின் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்த நிலையில், இன்று இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோகம் பக்தர்கள் படைசூழ இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சிலையாக காட்சி தரும் திருமுருகன் சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் யாக சாலை பூஜைகள் செய்து பக்தர்களின் அரோகரா கோசங்களுடன் திருமண வைபோகம் செய்து வைத்தனர்.
மாங்கல்யம் சூட்டப்பட்டு, மாலைகளும் மாற்றப்பட்டது, தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த திருமண வைபோகத்தில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருமுருகன், வள்ளி, தெய்வாணை திருமணத்தை கண்டு ரசித்தனர்., அனைவருக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அன்னதானமும் வழங்கப்பட்டது.














; ?>)
; ?>)
; ?>)