கோவையில் தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகி சிவம், சிந்தனைக் கவிஞர் கவிதாசன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…
கோவையில் பெரிதினும் பெரிது கேள் எனும் தலைப்பில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது…
மிஸ்ஸன் மில்லியனர் கிளப் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞான சஞ்சீவன குருகுலத்தின் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் தலைமை தாங்கினார்..

சாதிக்க விரும்பும் தொழில் முனைவோர்கள் தங்களது திறன்களை வளர்த்தி கொள்வது,நிதி மேலாண்மை,சந்தை நிலவரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற இதில், சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகி சிவம், சார்லஸ் காட்வின் மற்றும் தொழிலதிபர்கள் நேச்சுரல்ஸ் ஸ்பா சி கே குமரவேல் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனர்,ரமேஷ் அணில் சேமியா நிறுவனர் சுகுமார் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
இது குறித்து ஞான சஞ்சீவன குருகுலத்தின் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கும் அதில் வெற்றி பெறுவதற்கு ஆர்வம் உள்ளவர்களுக்கான நிகழ்வாக இந்த பெரிதினும் பெரிது கேள் நிகழ்வை நடத்துவதாக தெரிவித்த அவர்,குறிப்பாக புதிய தொழில்முனைவோர் தனது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்த நிகழ்வு நடைபெறுவதாக தெரிவத்தார். பெண் தொழில் முனைவோர்கள் தங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் அதற்கான தீர்வுகள் குறித்தும் பெண்களுக்கு என தனியாக அமர்வு நடைபெறுவதாக தெரிவித்தார்..

குறிப்பாக தற்போது தொழில் நுட்பம்,சந்தை நிலவரம்,ஆளுமை திறன் போன்றவற்றில் போதிய கவனம் செலுத்ததால் புதிய தொழில் முனைவார்கள் தொழில்களை தொடர முடியாத சூழல் ஏற்படுவதாக தெரிவித்த அவர்,இது குறித்த புரிதலை தொழில் முனைவோர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பெரிதினும் பெரிது கேள் நிகழ்வை நடத்துவதாக அவர் தெரிவித்தார்..
நிகழ்ச்சியில் கோவை,ஈரோடு,திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்..













; ?>)
; ?>)
; ?>)