சென்னை அடுத்த குரோம்பேட்டை நாகல்கேணியில் அரசு ஆதி திராவி நல துறை மேல்நிலைப்பள்ளியில் 1998 முதல் 2000 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் தெய்வசிகாமணி, கர்ண மகாராஜன்,அருண், பாரதி, உதயகுமார், ஜுலி, வினோலியா, ஏழுமலை திருமாறன் உட்பட பலர் ஒன்றாக இணைந்து நாம் படித்த பள்ளிக்கும் படிக்கு மாணவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி 1 லட்ச ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீனிவாசன் , ராஜசேகரன், ஜெயந்தி, ஜெஸ்ஸி சாந்தகுமாரி, சமூக ஆர்வலர் பலராம் கணித ஆசிரியர் ராதஸ்வாமி, அறிவியல் ஆசிரியர் வைர கண்ணு சிறப்பு அழைப்பாளர்கள், காவல் உளவுத்துறை ஆய்வாளர் விநாயகம், விசிக கட்சி ராஜவேலு, வழக்கறிஞர் தனிகைமணி, இளங்கலை ஆசிரியர் டில்லி பாபு, சத்தியமூர்த்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி ஸ்மார்ட் வகுப்பு அறையை திறந்து வைத்து மாணவர்களுக்கு தங்களது வாழ்க்கை தரம் உயரவும் மற்றும் சமூகத்தில் பண்புடன் வாழ கல்வி ஒன்றே சிறந்தது என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)