தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தில் பல இடங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, குறிப்பாக தலைநகர் சென்னை தத்தளித்து கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து கொண்டு, கடலுக்கு நடுவில் வீடு கட்டி வாழ்வது போல் உள்ளதாக தெரிவிக்கும் மக்கள். அத்தியாவசிய பொருள் வாங்குவதற்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சில மணி நேரம் மழைக்கே சென்னை தத்தளித்து கொண்டிருக்கிறது. சாலைகள் சேறு சகதியுமாக காட்சி அளிக்கிறது, இதற்கு முக்கிய காரணம் சரியான கட்டமைப்பு இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து நான்கு வருடத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து இப்படி மழை வரும் போதெல்லாம் சென்னை தத்தளித்து கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு வருடத்தில் என்ன நடவடிக்கை எடுத்தது திமுக என குமுறுகிறார்கள் ஓட்டு போட்ட மக்கள்.
சிறிய மழைக்கே சென்னையில் பல சாலைகள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.சென்னை புறநகர் மக்களின் முக்கிய உயிர்நாடியான தாம்பரம் முதல் பல்லாவரம் வரை சாலை அரிப்பு காரணமாக டூவீலரில் செல்கின்றவர்கள் விபத்துகளை சந்திக்க நேரிட்டு வருகிறது. கோடம்பாக்கம், வடபழனி மற்றும் தி.நகர் ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.
இந்நிலையில் சிறிய மழைக்கே சென்னை தத்தளித்து கொண்டிருக்கையில், ஸ்மார்ட் சிட்டி, மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் என்ற பெயரில் செலவிடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் என்ன ஆனது என்கிற கேள்வியை மக்கள் எழுப்பி வருகிறார்கள். 90% மழைநீர் வடிகால் பணிகள் முழுமை அடைந்து விட்டது என திமுக அரசு தம்பட்டம் அடித்த நிலையில், இது அனைத்தும் பொய் என நிரூபிக்கும் வகையில் அமைத்துள்ளது சென்னையில் பெய்ந்த 30 நிமிடம் மழை.
இந்நிலையில் மக்கள் ஆளும் திமுக அரசிடம் சரமாரியாக சில கேள்விகளை கேட்டு வருகிறார்கள், அதில் வடிகால்கள் அமைக்கப்பட்டு விட்டால், ஒவ்வொரு சாலையும் ஏன் தண்ணீரில் மூழ்கியுள்ளது? சமீபத்தில் போடப்பட்ட சாலை சிறிய மழைக்கே சிதைந்து போய் கிடக்கிறது. அந்த வகையில் மோசமான கட்டுமானம், தரமற்ற சாலை இவையனைத்தும், ஊழலில் வெளிப்பாடு என ஆளும் அரசை நோக்கி மக்கள் குற்றசாட்டுகளை அடுக்குகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மழை வந்து கொண்டே தான் இருக்கிறது, இது இயற்கையின் தவறு இல்லை, ஆளும் அரசாங்கம் மீது உள்ள தவறை வெள்ளிப்படுத்துகிறது. காரணம் ஒவ்வொரு வருடம் மழை வரும் போது, முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது என அரசு தம்பட்டம் அடிப்பது பெருமை இல்லை.
இதற்கு நிரந்தர தீர்வு என்ன .? மழை வந்தால் தண்ணீர் தேங்காமல் செல்ல என்ன வழி, அதற்க்கான திட்டமிடல் அரசிடம் உள்ளதா .? இதை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதை விட்டு விட்டு முகாம்களில் தங்கவைத்து சாப்பாட்டுக்கு வரிசையில் நிற்பதை மக்கள் விரும்பவில்லை. அந்த வகையில் சென்னை வெள்ளம், கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியின் தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.













; ?>)
; ?>)
; ?>)