கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள அஞ்சுகூட்டுவிளை புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்கு மேய்ப்புப் பணி அலுவல் ஆய்வுக்காக கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார்.

ஆலயப் பூஜைகள், பங்கு மேய்ப்புப் பணிகள், பக்தர்களுக்கான சீர்திருத்தம், சமூகப்பணிகளின் நிலை பற்றி அறிக்கைகள் பரிசீலித்து வழிகாட்டுதல்கள் வழங்கினார். நிகழ்வை நினைவுகூர மரக்கன்று நட்டு பசுமை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், பங்குத்தந்தையர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். பங்கு மேய்ப்புப் பணிகளில் ஒற்றுமை, ஒழுங்கு, சமூகப்பொறுப்பு வலுப்பெற இத்தகைய ஆய்வுகள் அவசியம் என்றும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் மறை ஆயர் நசரேயன் சூசை எடுத்துரைத்தார்.














; ?>)
; ?>)
; ?>)