மதுரை புது மாகாளிப்பட்டி சாலையில் பிரபல தேசிய வங்கியான கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை எதிர்பாராவிதமாக ஏடிஎம்மில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல அனுப்பானடி தீயணைப்புத்துறையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் ஏடிஎம் முற்றிலும் இருந்து சேதம் ஆனதால் ஏடிஎம்மில் இருந்த பணங்கள் எரிந்து நாசமாயின.
இது குறித்து காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .