புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.ஹவாய் மீது செருப்பு வீசியை கண்டித்தும் விசிக தலைவர் திருமாவளவன் வாகனத்தை வழி மறித்து ரவுடிசம் செய்த ஆர்எஸ்எஸ் பிஜேபியை சேர்ந்த ராஜீவ் காந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கறம்பக்குடி விசிகவினர் 100கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் செருப்பு வீசியதை கண்டித்தும், விசிக தலைவர் திருமாவளவன் வாகனத்தை வழி மறித்து ரவுடிசம் செய்த ஆர்எஸ்எஸ் பிஜேபியை சேர்ந்த ராஜீவ் காந்தியை கண்டித்தும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி வழியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் கறம்பக்குடி விசிகவினர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரெத்தினம் தலைமையில் மண்டல துணைச் செயலாளர் திருமறவன் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் பலர் பங்கேற்றனர்.