மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா வரும்22 காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.
இவ்விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 27 ஆம் தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும். திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும்.

விழாவில் நிறைவு நாளான 28 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி விதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார் அன்று மாலை பாவாடை தரிசனம் நடைபெற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.