புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டுவிழாவை கொண்டாடும் வகையில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள மதகடி பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.