மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது.

உறுதி செய்யப்படவே சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ ஆலோசனையின் பேரில் மாவட்ட செயலாளர்கள் சித்திக், ராஜமோகன் ஆகியோர் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தனர்.

இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலாஜி ,தொகுதி செயலாளர் கார்த்தி, கருப்பு, ரஞ்சித் ,சபரி அமீர்ராஜ் எழிரசு இளங்கீரன் சார்லஸ் முத்துக்குமார் முருகன்உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.