இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, AITUC தொழிற்சங்கம் இணைந்து தமிழக அரசே, தமிழக தொழிலாளர் கொள்கையை வெளியிடு. என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கூடலிங்கம், தோழர் முனியசாமி, ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து சங்க தோழர் ராஜேந்திரன், தூய்மை பணியாளர் சங்க தோழர் மாரியப்பன், ஆட்டோ தொழிலாளர் சங்க தோழர் ராஜாராம். ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினுடைய மாநில குழு உறுப்பினர் தோழர் பாலமுருகன் துவக்கி வைத்தார். கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் தோழர் நடராஜன் விளக்கி பேசினார்.

கட்சியினுடைய மாவட்ட செயலாளர் தோழர் செந்தில்குமார் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் ரவி, மாநகர செயலாளர் தோழர் சுரேஷ்குமார், வட்டார குழு தோழர்கள் கோவிந்தசாமி, கிருஷ்ணன், அமுல் ராணி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.