• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

ByM.S.karthik

Oct 8, 2025

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு சேவை முகாமான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் நாட்டார்மங்கலம் ஊராட்சி சேர்ந்த கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இந்நிகழ்வில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பாண்டி சதீஷ்குமார் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மாவீரபிரபாகரன் உசிலம்பட்டி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் விஏஓ ரஞ்சனி ஆர் ஐ வேணிரோஜா ஊராட்சி செயலாளர் செல்லபாண்டியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.