திண்டுக்கல் அருகில் அரசு பஸ்சை டிராக்டரில் கட்டி இழுத்து வரும் கொடுமை நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசு பேருந்தை டிராக்டரில் கட்டி இழுத்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே அச்சனம்பட்டியில் இருந்து அரசு பேருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும்போது பழுதாகி நின்றது. இதனையடுத்து டிரைவர் மற்றும் நடத்துனர் பயணிகளை இறக்கி விட்டு டிராக்டர் உதவியுடன் அரசு பேருந்தை பணிமனைக்கு கட்டி இழுத்து வந்தனர்.
டிராக்டர் அரசு பேருந்தை கட்டி இழுத்து வந்த காட்சியை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்தனர். 2 நாட்களுக்கு முன்பு கரகாட்டக்காரன் பட பாணியில் அரசு பேருந்தின் டயர் கழண்டு பேருந்தை முந்தி சென்றது. இது குறித்து நடவடிக்கை எடுப்பது யார் என்று கேள்வி எழுப்பி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.