• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு..,

BySubeshchandrabose

Sep 29, 2025

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக இருந்து ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு பணப்பலன்களை கடந்த எட்டு மாத காலமாக தராமல் தடுத்து அலைக்கழித்து வருவதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக இருந்து ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு பணப்பலன்களை கடந்த எட்டு மாத காலமாக தராமல் தடுத்து அலைக்கழித்து வருவதாக ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் மீது புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக தலைமை எழுத்தர் ஜியாகான் மற்றும் பிரிவு எழுத்தர் சுப்பிரமணி ஆகிய இருவரும் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களு பணபலன்களை தருவதற்கு லஞ்சமாக பணம் கேட்பதாகவும்.

அதை தராததால் இபிஎப் வட்டிதொகை மற்றும் நிலுவைத்தொகை , 8 மாத கால விடுமுறை தொகை , விடுபட்ட சம்பள உயர்வு நிலுவைத்தொகை ஆகியவற்றை தர அலைக்கழித்து தாமதப்படுத்தி வருவதாகவும் புகார் கூறி.

ஆண்டிபட்டி பேரூராட்சி வளாகத்திலேயே சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் உடனடியாக லஞ்சம் கேட்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி கோசங்கள் எழுப்பப்பட்டனர்.

இதையடுத்து தொடர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் பணப்பலன்களை வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டு வருவதால் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது..